மகரம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை

சிலர் புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள்.
மகரம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை
Published on

மகரம்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும். மற்றவர்களால் முடிக்க முடியாத செயல்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பிள்ளை களுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கக்கூடிய அமைப்பு உள்ளது. புதிய நிலம், வீடு, வாகனம் மற்றும் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும்.

புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். ஆரோக்கிய குறைபாடு அகலும். 25.4.2026 அன்று இரவு 8.01 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சகோதர உறவுகளால் மன சஞ்ச லங்கள் உண்டாகும். தினமும் சிவகவசம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com