கடகம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.
கடகம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை
Published on

கடகம்

உழைப்பின் பயனை அடையும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்கள் குறையும். பேச்சை மூலதன மாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத்தடை அகலும். புத்திரப் பிராப்தம், பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

சில வாரங்களில் நிகழப் போகும் குருப் பெயர்ச்சியால் நல்ல மாற்றங்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். 13.4.2026 அன்று மாலை 3.44 மணி முதல் 15.4.2026 அன்று காலை 9.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று தண்ணீர் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com