ரிஷபம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.
ரிஷபம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை
Published on

ரிஷபம்

முன்னேற்றம் அதிரிக்கும் வாரம்.2,5ம் அதிபதி புதன் 8,11ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். எதிர்பாராத தன லாபம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும். தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.

கூட்டுத் தொழிலால் ஆதாயம் கூடும். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும்.மன வலிமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். வராக் கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். ரிஷப ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். சிலரின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். தமிழ் புத்தாண்டு அன்று குளிர்பானம் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com