கும்பம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை

சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள்.
கும்பம்- வார ராசிபலன் 12.4.2026 முதல் 18.4.2026 வரை
Published on

கும்பம்

புதிய திட்டங்களில் வெற்றி உண்டாகும் வாரம்.கும்ப ராசிக்கு சம சப்தம ஸ்தான அதிபதியான சூரியன் ராசிக்கு மூன்றில் உச்சம் பெறுகிறார். புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள். புதிய முயற்சியில் அதிக லாபம் பார்ப்பீர்கள்.அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள்.உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள்.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌. உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கி யம் மேம்படும்.கணவன்-மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். குடும்பத்து டன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பல வகையில் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும். வாடகை வீட்டு தொல்லை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பாக பெற்றோர்கள், உடன் பிறந்த வர்கள் மூலம் சிறு மன உளைச்சல் உண்டாகும். தமிழ் புத்தாண்டு அன்று பழங்கள் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com