

மகரம்
சாதகமான வாரம்.ராசிக்கு மூன்றாமிடமான உப ஜெய ஸ்தான அதிபதி குரு பகவான் 6,9ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளை களின் கல்வி, திருமணம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசை உண்டாகும். சிலருக்கு புதியதாக காதல் அரும்பும்.
திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். சக பணியாளர் களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு மாரியாதை கூடும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். காணாமல் போன பொருட்கள் கிடைக்கும். திருமணத் தடை அகலும்.தமிழ் புத்தாண்டு அன்று நல்லெண்ணெய் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406