

கடன் சார்ந்த விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி குருவும் 6,11-ம் சுக்கிரனும் சம சப்தம ஸ்தானத்தில் இணைந்து ராசியை பார்க்கி றார்கள். பெண்களுக்கு சிறப்பான உயர்வான காலம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பழைய வழக்கு விசாரணைகள் மீண்டும் தலை தூக்கும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. சகோதரரிடம் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படும். உஷ்ணம் தொடர்பான சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
சிலருக்கு பொருளாதார பற்றாக்குறையை சமன் செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும். கடன் பிரச்சினை அதிகரிக்கலாம். வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், ஏஜென்ஸி தொழில் புரிபவர்களுக்கு பணப்பரிவர்த்தனையில் தாமதங்கள் ஏற்படலாம்.
அடுத்தவர்களுக்காக கடன் படுதல், கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படலாம். திருமண முயற்சி நிறைவேறும். தேக நலனில் கவனம் தேவை. மாணவர்களுக்கு போட்டி, பந்தயம், தேர்வில் அமோக வெற்றி உண்டு. தயிர்சாதம் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406