

எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியடையும் வாரம். ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் சமயோசித புத்தியால் சீராகும்.
சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும். புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மனநிறைவு தரும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். திருமண ஏற்படுகள் நல்ல முறையில் நடக்கும்.
வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சீராகும். 14.5.2026 அன்று இரவு 10.34 மணி முதல் 16.5.2026 அன்று இரவு 10.46 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதீத உடல் உழைப்பால், சோர்வு மிகுதியாகும்.
பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிப்போகும். புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முன்னோர்களின் நல்லாசியை பெற்றுத் தரும் பித்ருக்கள் பூஜையும், குலம் காக்கும் குல தெய்வ வழிபாடும் அவசியம்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406