

சாதகமான வாரம்.ராசியில் குரு சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. கொடுக்கல், வாங்கல் சீராகும். அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் புரிபவர்களுக்கு நன்மைகள் கூடுதலாகும்.
இழந்த பதவிகள் கிடைக்கும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். வரவு வந்தாலும் செலவும் கூடும். கைப் பணம் கரையும். சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்கலாம்.
குடும்ப நலனுக்காக ஆன்மீக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். தம்பதிகளின் உறவில் அந்நியோன்யம் நீடிக்கும். செலவை குறைத்து சேமிப்பை உயர்த்த ஒளிமயான வாழ்வு அமையும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும்.
மாணவ மாணவிகளுக்கு நல்ல நட்பால் முன்னேற்றம் நிலவும். 10.5.2026 அன்று பகல் 12.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நேரம் காலம் பார்த்துச் செய்வது நல்லது. பனிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். புதன்கிழமை பச்சை பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406