மகரம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை

வெளிநாட்டு வேலை முயற்சி குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சாதகமாகும்.
மகரம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
Published on

எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகும் வாரம். ராசிக்கு 4-ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும்.

தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். சிலர் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வார்கள். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சாதகமாகும்.

தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். தொழிலால் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு கோட்சார ராகு கேதுவால் திருமண முயற்சி தள்ளிப்போகும்.

மாணவர்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க கடின முயற்சி செய்ய வேண்டும். சிலரின் மறுமண முயற்சி சித்திக்கும். தங்கம் வாங்கும் யோகம் உள்ளது. மருத்துவ உதவியில் குழந்தை பிறக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு தண்ணீருடன் உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com