

புத்திக்கூர்மை பளிச்சிடும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்காலம் பற்றிய பயம் விலகும். புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். திருமணமான இளம் பெண்களுக்கு கரு உருவாகும். பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும். பூர்வீகச் சொத்தை விற்பனை செய்து, புதிய மனை வீடு வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பால்ய வயது நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.
பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். விருப்பப்படி இட மாறுதல் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் கூடி வரும். 1.6.2026 அன்று இரவு 7.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் கூடும். தினமும் வேல் வழிபாடு செய்வதால் சங்கடங்கள் விலகும்.
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார் தன வரவில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.பணவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சியும் ,சந்தோஷமும் குதூகலமும் அதிகரிக்கும். துக்கம் குறையும். ஏமாந்த தொகை கைக்கு வரும். தொட்டது துலங்கும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.அரசு காரியங்கள் சாதகமாக நிறைவேறும். 1.6.2026 அன்று இரவு 7.08 முதல் 4.6.2026 அன்று காலை 7.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் வேலை பளு கூடும். அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடவும்.
புதிய அனுபவம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை ஜென்ம குருவாக பலனளித்த குரு பகவான் இனி தன குருவாக பலன் தரப் போகிறார். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். இது இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுக் தரக்கூடிய அமைப்பாகும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராள மான பணச் செலவுகள் ஏற்படும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 4.6.2026 அன்று காலை 7.41 மணி முதல் 6.6.2026 அன்று இரவு 7.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய விசயங்கள் தாமதமாகும். ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனை களை கேட்டு ஏமாறாதீர்கள். துளசி மாலை அணிவித்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
தெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம்.கடக ராசிக்கு 6,9ம் அதிபதியான குரு பகவான் ராசியில் உச்சம் பெற்று ஜென்ம குருவாக பலன் வழங்கப் போகிறார். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இழுபறியாக இருந்த பணிகள் முடியும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பி க்கலாம். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்க ளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதியபொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் மற்றும் குல தெய்வத்தின் நல்லாசிகள் நிரம்பப் பெறுவீர்கள்.இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். சுயமுயற்சி, உழைப்பினால், கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.