

நன்மையும், தீமையுமற்ற வாரம். ராசிக்கு புதன் சுக்கிரன் மற்றும் சனியின் பார்வை உள்ளது. இது அஷ்டம குருவின் காலம் என்பதையும் மறக்கக்கூடாது. மன தடுமாற்றம் அதிகரிக்கும். இது வரையில் உண்டான வெற்றிகள் எல்லாம் தடை பட்டது போன்ற உணர்வு மேம்படும். எனவே தேவையற்ற பேச்சைத் தவிர்க்கவும். தம்பதிகளிடம் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றக் கூடும்.வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பத்திரப் பதிவு தாமத மாகும். ஒரே நேரத்தில் முக்கியமான பல செயல்களை கவனிக்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற குழப்பம் இருக்கும்.
முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும்.உடல் நலம் காக்க வேண்டும். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். காதல் காலை வாரும். தேவையற்ற வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்கவும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.
மாற்றமும், ஏற்றமும் உண்டாகும். வாரம். ராசிக்கு உச்ச குருவின் பார்வை உள்ளது. சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். இதுவரை தேக்கமடைந்த கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். கணவன், மனைவி ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும்.
புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் வந்து சேரும். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாயகரை வழிபடவும்.
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். தற்போது ராசியில் உள்ள ராகுவிற்கு குரு பார்வை இல்லை என்பதை மறக்கக்கூடாது. அன்றாட முக்கிய பணிகளில் கூட விழிப்புடன் இருக்க வேண்டும். சில பல முயற்சிகளில் போராடி வெற்றி உண்டாகும்.ராசியை ராகு கடக்கும் வரை வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முடிவுகளை எடுக்கக் கூடாது. ஆடை ஆபரணம், சொத்து சேர்க்கை, ஏற்படும். புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.
சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். கணவன், மனைவி உறவு சுமூகமாக இருக்கும். உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்படலாம். சனிக்கிழமைகளில் சலவைத் தொழிலாளிகளின் தேவை அறிந்து உதவி செய்யவும்.
இலக்கை நோக்கி முன்னேறும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி குருவின் ஒன்பதாம் பார்வை ராசியில் உள்ள சனியின் மேல் பதிகிறது.ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாகக் குறையும். வாழ்க்கைத் தரம் உயரும். வராது என்று நினைத்த கடன் தொகை வசூலாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். ஆரோக்கியமாக வாழ்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசனை அதிகமாகும். அநாவசிய செலவுகள் குறையும். பொருளாதார முன்னேற்றம் பெருகும் எதிர்பார்த்ததை விட அதிகமாக தனவரவு இருக்கும். வாக்கால் வருமானம் பெருகும்.
புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவாக்கி லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று தயிர் அபிஷேகம் செய்து விநாயகரை வழிபடவும்.