

நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் வாரம். ராசி அதிபதி சூரியன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் வழங்கக்கூடிய காலமாகும்.பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிரார்த்தனைகளின் மூலம் மன நிம்மதி ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தை காக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். தினமும் சூரிய நமஸ்ஹாரம் செய்யவும்.
பாக்கிய பலன்கள் அடையும் வாரம். ராசி அதிபதி புதன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் 2,9-ம் அதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது லட்சுமி நாராயண யோகமாகும். தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள்.வியாபா ரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவார்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.
உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான மனநிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதன்கிழமை கருட வழிபாடு செய்யவும்.
அதிர்ஷ்டமான வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் 9-ம் இடமான பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் சஞ்சரிக்கிறார். சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். நீண்டகால விருப்பங்களும் எண்ணங்களும் நிறைவேறும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.பணவரவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். திருமணத் தடை அகலும்.
பொன், பொருள், புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது.புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்து உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை மகாலட்சு மியை வழிபடவும்.
தடைகள் தகறும் வாரம்.ராசிக்கு குரு, சூரியன் மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது.உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும்.தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்றுவீர்கள்.பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். உடல் நலக் கோளாறுகள் சீராகும். செவ்வாய்க்கிழமை சிகப்பு அரளி மாலை அணிவித்து முருகனை வழிபடவும்.