தனுசு - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

வழக்கு விவகாரங்கள் மற்றும் சொத்து தொடர்பான முயற்சியை ஒத்தி வைக்கவும்.
தனுசு - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை
Published on

விவேகத்துடன் செயல்பட வேண்டிய நேரம்.ராசிக்கு குரு சுக்கிரன் மற்றும் சனியின் பார்வை உள்ளது. திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். கடன் சுமையை குறைக்க புதிய வழிகள் தென்படும். அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற போகும் ராசி அதிபதி குருவின் பார்வை சனியின் மேல் பதியப் போவதால் அர்த்தாஷ்டம சனியினின் தாக்கம் குறையும். சிலர் வீடு, நிலம் வாகனம், தங்கம் போன்ற வகையில் சுப முதலீடு செய்வீர்கள். நோய் அகல மருத்துவர் ஆலோசனை கை கொடுக்கும்.

அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதி உதவி கிடைக்கும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வெளிவட்டார நட்புகள் கிடைக்கும். தேவையற்ற எதிர்பாலின நட்புகளை தவிர்ப்பது நல்லது. 20.5.2026 அன்று இரவு 10.39 மணி முதல் 22.5.2026 அன்று நள்ளிரவு 2.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வழக்கு விவகாரங்கள் மற்றும் சொத்து தொடர்பான முயற்சியை ஒத்தி வைக்கவும். மகாவிஷ்ணுவை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com