விருச்சிகம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

பெண்களின் சுய தொழில் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
விருச்சிகம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை
Published on

புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேறும். உங்களின் திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ செழிப்பு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். விவசாய நிலத்திற்கு புதிய குத்தகைதாரர்கள் ஒப்பந்ததாரர்கள், கிடைப்பார்கள். பெண்களின் சுய தொழில் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

அரசியல் பிரமுகர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் அகலும். சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். தொழில், உத்தியோக போட்டிகளை சமாளிக்க முடியும். 18.5.2026 அன்று இரவு 10.05 மணி முதல் 20.5.2026 அன்று இரவு 10.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும். கடுமையான வாக்கு பிரயோகத்தால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com