

தன பிராப்தம் உண்டாகும் வாரம். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்தில் குருப் பார்வை பதிவதால் பொருளாதார மேன்மை உண்டாகும். இதுவரை ராசிக்கு கவசமாக சாதகமாக இருந்த குருப் பார்வை தற்போது இல்லை என்பதால் சிந்திக்கும் திறன் குறையும். அவசரமின்றி நிதானமாக செயல்படவும். பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. சிலர் பணியிலிருந்து ஓய்வு பெறலாம். திருமணத் தடை அகலும். மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். சிலர் வயது மூப்பு காரணமாக தனிமையில் ஓய்வு எடுக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 18.5.2026 அன்று இரவு 10.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பிறந்தவர்களுடன் சொத்துக்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை தவிர்க்கவும். சில பெண்களுக்கு வரன் அமைவதில் தடைகள் உருவாகலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. விநாயகர் வழிபட்டால் இன்னல்களை தவிர்க்க முடியும்.