கும்பம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை

பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்களின் ஆதரவு உண்டு. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கும்பம் - வார ராசிபலன் 17.5.2026 முதல் 23.5.2026 வரை
Published on

மேன்மையான வாரம். ராசி அதிபதி சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிந்தனையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் புதிய உத்வேகம் பெறும்.விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும். அரசாங்க காரியங்களில் ஏற்பட்ட தடை தாமதங்கள் சீராகும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். சிலருக்கு திடீர் பண வரவுடன் ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தொழிலும், வாழ்க்கையிலும் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்களின் ஆதரவு உண்டு. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் ஆன்மீகச் சுற்றுலா அல்லது ஓய்விற்கு வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். கண் திருஷ்டி பாதிப்புகள் குறையும். சிவன் கோவிலுக்கு எண்ணை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com