

சிம்ம ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் லாபாதிபதி புதனுடனும், சுக்ரனுடனும் இணைந்து சஞ்சரிக்கிறார்.
இதனால் 'புத ஆதித்ய யோக'மும். 'புத சுக்ர யோக'மும் உருவாகிறது. அந்த நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருப்பதால் போட்டிகளுக்கு மத்தியில் முன் னேற்றம் உண்டு, புதிய திருப்பங்கள் ஏற்படும்.
வருமானம் ஒரு மடங்கு வந்தால் விரயம் இருமடங்கு ஆகலாம். எனவே சுபச்செலவுகளை மேற்கொள்வது நல்லது.
மிதுன - சுக்ரன்
வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் நான்.
தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பால் நன்மை காண்பீர்கள். பொருளாதாரத்தில் நன்மை ஏற்படும் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள்.
மிதுன - புதன்
வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும்.
பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். தொழில் வெற்றிநடைபோடும். எதிர்காலத்தைப் பற்றிய மளப்பயம் அகலும் 'இதுவரை கொடுத்ததை வாங்க முடியவில்லையே, வாங்கியதை கொடுக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, கொடுக்கள் வாங்கல்கள் ஒழுங்காகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப இயலாதவர்கள். பொழுது தாய்நாடு திரும்ப வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கடக - சுக்ரன்
வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரக சேர்க்கையின் காரணமாக சகோதர வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். தொழில் மாற்றம் பற்றி சித்திப்பீர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு, உத்தயோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு கிட்டும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் சகப் பணியாளர்களின் ஆதர கிட்டும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை.
இம்மாதம் அனுமன் வழபாடு ஆனந்தம் வழங்கும்.மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.