மிதுனம்- 2026 வைகாசி மாத ராசிபலன்

வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம்.
மிதுனம்- 2026 வைகாசி மாத ராசிபலன்
Published on

மிதுன ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

எனவே விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் கவலைப்படத் தேவையில்லை.

காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். கடமையை செவ்வனே செய்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புனிதப் பயணம் அதிகரிக்கும். 3-ல் கேது இருப்பதால் முன்னேற்றப் பாதையில் இடையூறுகள் வந்தாலும், அதைச் சமாளித்துவிடுவீர்கள்.

மிதுன - சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபச்செலவு அதிகரிக்கும்.

குறிப்பாக பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி கைகூடும். புதிய வேலைக்கு ஏற்பாடு செய்த முயற்சியும் பலன் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

சமூக சேவையில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். அதன் விளைவாக பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது நல்ல நேரம்தான்.

உடல்நலம் சீராகும். உள்ளம் உற்சாகத்தோடு இயங்கும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்சுமை குறையும். தொழில் ஸ்தானாதிபதி குரு உங்கள் ராசியிலேயே இருப்பதால், தொழில் முன்னேற்றம் உண்டு.

உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கிகாரம் கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தந்த அதிகாரிகள் மாற்றப்படுவர். புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடக - சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு அவர் குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் காரணமாக மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும்.

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கிடைக்கும். புனிதப் பயணம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். நாட்டுபற்று மிக்கவர்களின் நட்பால் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். நீண்டதூரப் பயணங்கள் பலன் தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

இம்மாதம் தென்முக கடவுள் வழிபாடு நன்மையை வழங்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

X

Maalai Malar
www.maalaimalar.com