கும்பம்- 2026 வைகாசி மாத ராசிபலன்

வீடு மாற்றங்கள் இடமாற்றங்கள் உண்டு.
கும்பம்- 2026 வைகாசி மாத ராசிபலன்
Published on

கும்ப ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொடக்கம் சிறப்பாகவே இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். மே 30-ந் தேதிக்கு பிறகு, குரு 6-ம் இடத்திற்கு வருகிறார். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிக்கும் இடத்திற்கு குரு வருவதால் மாதத்தின் பிற்பகுதியில் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்கள் இடமாற்றங்கள் உண்டு.

மிதுன - சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிலுவ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும்.

பெற்றோர்வழி ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப் பிரிவினைக்கு இதுவரை ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர்.

உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உண்டு.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன், எனவே பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம், பூர்வ புண்ணியந்தின் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

குறிப்பாக பிள்ளைகள் படித்து முடித்து வேலையில்லாமல் இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

தொழிலில் சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்துசேரும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும் நேரமிது. வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

கடக - சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இக்காலத்தில் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களைன வாங்கி மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்குவதற்கான ஏற்பாடு செய்யும் நேரமிது. பெற்றோர்களின் ஆதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள், 'வாங்கியதை கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முயவில்லையே' என்ற கவலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், கூடுதல் சம்பளமும் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த மாற்றினத்தவர் கைகொடுத்து உதவுவர்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியை கூட்டும். மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

X

Maalai Malar
www.maalaimalar.com