கடகம்- 2026 வைகாசி மாத ராசிபலன்

உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்- 2026 வைகாசி மாத ராசிபலன்
Published on

கடக ராசி நேயர்களே! பராபவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் செவ்வாயோடு இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார்.

எனவே மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும், தடைகள் தானாக விலகும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகுவை, குரு பகவான் பார்ப்பதால் அந்த ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய நீங்கள் எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு குரு பகவான் வந்தபிறகு, மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள்.

மிதுன சுக்ரன்

வைகாசி 1-ந் தேதி (15.5.2026) அன்று மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான சுக்ரன்.

விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறி உண்டு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். தர்ம காரியங்களில் ஈடுபட்டு, தன்னை யார் என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள்.

மிதுன - புதன்

வைகாசி 12-ந் தேதி (26.5.2026) அன்று மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன், அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மட்டுமல்லாமல், உறவினர் மற்றும் நண்பர்களின் மூலமாகவும் விரயங்கள் வரலாம்.

உத்தியோகத்தில் திடீரென இடமாற்றம் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் போட்டி அதிகரிக்கும். வரவு ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்கு ஆகின்றதே' என்று கவலைப்படுவீர்கள்.

பாதியில் நின்ற கட்டி டப்பணி மீதியும் தொடரும். சுபச் செலவுகளைச் செய்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

கடக சுக்ரன்

வைகாசி 26-ந் தேதி (9.6.2026) அன்று கடக ராசியான உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக- லாபாதி பதி, உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.

ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குடும்பத்துடன் குதூகலப் பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலமும் உதிரி வருமானம் வரலாம்.

பொதுவாக இக்காலம் குரு - சுக்ர சேர்க்கை காலம் என்பதால், எதிர்பாராத மாற் றங்கள் ஏற்படும். எனவே அதை எதிர்கொள்ள, உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வி.ஐ.பி.க்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களால் பெருமை சேரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரம் திருப்தி தரும்.

இம்மாதம் துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும். மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com