Today Rasipalan | இன்றைய ராசிபலன் 27.3.2026: இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
ராசிபலன்
ராசிபலன்
Published on

மேஷம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

ரிஷபம்

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மிதுனம்

எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

கடகம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

சிம்மம்

உற்சாகம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

கன்னி

மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். விவாக பேச்சுகள் முடிவடையும்.

விருச்சிகம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள்.

தனுசு

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மகரம்

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும்.

கும்பம்

விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

மீனம்

தன்னம்பிக்கை கூடும் நாள். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com