Today Rasipalan | இன்றைய ராசிபலன் 26.3.2026: இந்த ராசிக்காரர்கள் புத்துணர்ச்சியோடு செயல்படுவர்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.
ராசிபலன்
ராசிபலன்
Published on

மேஷம்

உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உன்னதமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

ரிஷபம்

புத்துணர்ச்சியோடு செயல்படும் நாள். புதிய உத்தியோகத்தில் சேர எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

மிதுனம்

உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

கடகம்

சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்படைய வேண்டிய நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபார ரீதியாக எடுத்த புதுமுயற்சியில் அனுகூலம் உண்டு.

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்பர்.

கன்னி

இனிய சம்பவம் நடைபெறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு.

துலாம்

சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். தனவரவில் தடை ஏற்படும். உதவிக்கரம் நீட்டுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

விருச்சிகம்

காரிய தடையால் கவலைகள் அதிகரிக்கும் நாள். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். குடும்பச்சுமை அதிகரிக்கும். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது.

தனுசு

உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடிவரும். விலை மதிப்புமிக்க பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். வரன்கள் வாயில் தேடி வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கும்பம்

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இடம் வாங்கும் எண்ணம் உருவாகும்.

மீனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com