

வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். அரசு வழியில் கேட்ட உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும்.
யோகமான நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
சுறுசுறுப்பாக செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். கடல் தாண்டி வரும் செய்தி ஆதாயம் தரும்.
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
காரியங்களில் தாமதம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். தடம் மாறிச்சென்ற நண்பர்கள் திரும்பி வருவர்.
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.