Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.3.2026: இவர்களுக்கு செல்வாக்கு உயரும்

ராசிபலன்
ராசிபலன்
Published on

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை இங்கு அறிந்துகொள்வோம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணிச்சுமை அதிகரிக்கும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிறரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.

ரிஷபம்

மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

மிதுனம்

விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் மேலோங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

கடகம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

செல்வாக்கு உயரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சனை அகலும்.

கன்னி

இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

துலாம்

வரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். சகோதர வழியில் சந்தோஷத் தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு

மனக்குழப்பம் அகலும் நாள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக முடியும்.

மகரம்

புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு.

கும்பம்

எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்பர்.

மீனம்

முன்னேற்றம் கூடும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com