Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 5.4.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்
Published on

மேஷம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

ரிஷபம்

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழில் சீராக நடைபெறும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம்

விடியும்பொழுதே பொன்னான தகவல் கிடைக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

கடகம்

உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும்.

சிம்மம்

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.

கன்னி

வரவு திருப்தி தரும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

துலாம்

சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது நல்லது. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டு. லாபம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

யோகமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை சேர்க்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

மீனம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். எதிலும் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com