Today Rasipalan: இன்றைய ராசிபலன் 01.07.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை....

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 01.07.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை....
Published on

மேஷம்

யோகமான நாள். ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். திருமண முயற்சி கைகூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கடகம்

பிரச்சனைகள் தீரும் நாள். இடமாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். பழகிய சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்

மனக்குழப்பம் அகலும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

கன்னி

பிரபலமானவர்களால் சில பிரச்சனைகள் தீரும். வீட்டை அலங்கரித்துப் பார்ப்பதில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

துலாம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

செல்வநிலை உயரும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும்.

தனுசு

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். தொழில் சம்பந்தமாக சில அனுபவஸ்தர்களை சந்திப்பீர்கள். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்

சந்தோஷமான செய்தி வந்து சேரும்நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கும்பம்

இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com