Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.6.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சி கைகூடும்
Published on

மேஷம்

புதிய யுக்திகளைக் கையாளும் நாள். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

ரிஷபம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும்.

மிதுனம்

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்

நல்லது நடக்கும் நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். துணையாக இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பயணங்களால் பலன் உண்டு.

கன்னி

விரயங்கள் ஏற்படும் நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் இடமாற்றம், உண்டு. ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணைவர்.

துலாம்

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பயணம் பலன் தரும்.

விருச்சிகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை உயரதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

மகரம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சனைகள் அகலும். திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கும்பம்

அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

மீனம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அந்நியதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். வியாபார விரோதம் விலகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com