Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வீடுவாங்கும் முயற்சி கைகூடும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வீடுவாங்கும் முயற்சி கைகூடும்...
Published on

மேஷம்

மங்கலச் செய்தி வீடுதேடி வரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதியவர்கள் வந்திணைவர்.

ரிஷபம்

முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமியால் பிரச்சினை ஏற்படும். பணங்களைத் தள்ளி வைப்பது நல்லது.

கடகம்

மனநிறைவு ஏற்படும் நாள். மறக்க முடியாத சம்பவங்கள் தடைபெறும். வீடுவாங்கும் முயற்சி கைகூடும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும்.

சிம்மம்

மனக்குழப்பம் அகலும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொலை துாரத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

கன்னி

நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வருமானம் திருப்தி தரும்.

துலாம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்டுப் போன வேலையொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

யோகமான நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் குறுக்கீடுகள் அகலும்.

மகரம்

உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ மொன்று நடைபெறும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர். வரவு திருப்தி தரும்.

கும்பம்

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். செல்வாக்கு மேலோங்கும். திடீர் பணவரவு உண்டு. முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

மீனம்

கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். கடமையிலிருந்த தொய்வு அகலும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.

X

Maalai Malar
www.maalaimalar.com