Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.4.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாழ்வில் புகழ் கூடும்
Published on

மேஷம்

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். அலைபேசி வழியில் வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.

மிதுனம்

மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். அரைகுறையாக நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

கடகம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

கன்னி

பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

துலாம்

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

விருச்சிகம்

வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூடப் பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும்.

மகரம்

விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. மனச்சோர்வு அதிகரிக்கும்.

கும்பம்

அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் குறுக்கீடு உண்டு.

மீனம்

தேவைகள் பூர்த்தியாகும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com