Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.5.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
Published on

மேஷம்

பிரபலஸ்தர்களை சந்தித்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.

ரிஷபம்

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

கடகம்

நாலாபுறமும் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

சிம்மம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும்.

கன்னி

வம்பு வழக்குளை சமாளித்து வளம் காணும் நாள். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

துலாம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் தொல்லை உண்டு. பயணங்களை மாற்றி அமைக்க நேரிடும்.

விருச்சிகம்

குருவை வழிபட்டு குதூகலம் தரும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகப் பணியில் அக்கறை காட்டுவீர்கள்.

தனுசு

இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகும்.

மகரம்

தென்முக கடவுள் வழிபாடு நன்மை தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் கவனம் தேவை.

மீனம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டியதற்கு ஆதாயம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com