Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.3.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 24.3.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் நாள்
Published on

மேஷம்

தொட்டது துலங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழிலில் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். உத்தியோகத்தில் கவுரவப் பொறுப்புகள் தேடி வரலாம்.

மிதுனம்

முன்னேற்ற பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும்.

கடகம்

கடன் சுமை குறையும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும்.

சிம்மம்

தனவரவு திருப்தி தரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு நீடிக்கும். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.

கன்னி

மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்திலிருந்து விலகி சுயதொழில் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

துலாம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் குறுக்கீடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

மகரம்

குடும்பத்தினர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதிக விலை கொடுத்து வாங்கிய சில பொருட்கள் திருப்தியில்லாமல் போகலாம்.

கும்பம்

தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி கைகூடும்.

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நூதனப் பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள். பயணங்கள் பலன்தரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com