Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.4.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு
Published on

மேஷம்

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பழைய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து செயல்படுவர்.

ரிஷபம்

போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எடுத்த முயற்சி பலன்தரும்.

மிதுனம்

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

கடகம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசு பணிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் சீராக நடைபெறும்.

சிம்மம்

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கைகுரியவர்கள் சில காரியங்களை முடித்து கொடுப்பர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

கன்னி

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். சந்தர்ப்பம் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.

துலாம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைவிட செலவு கூடும். தொழிலில் பணியாளர் தொல்லை உண்டு.

தனுசு

முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மகரம்

அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

கும்பம்

அருகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.

மீனம்

தெய்வீக பயணங்களால் திருப்தியடையும் நாள். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். கூட்டு முயற்சிகளில் மாற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com