Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 21.4.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு
Published on

மேஷம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கடகம்

முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

சிம்மம்

இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி

பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சனைகள் குறையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும்.

துலாம்

அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படும். வம்பு வழக்குகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

விருச்சிகம்

மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விழிப்புணர்ச்சி தேவை. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்க்கவும். வரவைவிட செலவு கூடும்.

தனுசு

ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்

யோகமான நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

கும்பம்

தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளைப் பார்த்து மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர்.

மீனம்

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com