

யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
முன்னேற்றம் ஏற்படும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். நேற்று செய்ய மறந்த வேலையொன்றால் அவதிப்படலாம். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம்.
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
யோகமான நாள். நீண்ட நாளையப் பிரச்சனை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
தனவரவு தாராளமாக வந்து சேரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக முடியும்.