Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு விவாகப்பேச்சு முடிவிற்கு வரும்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 7.5.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு விவாகப்பேச்சு முடிவிற்கு வரும்...
Published on

மேஷம்

வம்பு, வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும்.

ரிஷபம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறரைப் பற்றி குறை பேசாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவு அதிகரிக்கும்.தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை.

மிதுனம்

வருமானம் போதுமானதாக இருக்கும். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

கடகம்

மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பச்சுமை கூடும். வீண் விரயமுண்டு, பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள், தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.

சிம்மம்

ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். விவாகப்பேச்சு முடிவிற்கு வரும்.

கன்னி

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள், புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

துலாம்

பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.

விருச்சிகம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி உண்டு.

தனுசு

மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

மகரம்

எதிரிகள் உதிரியாகும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரும்.

கும்பம்

அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள்.

மீனம்

பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com