

பிரச்சனைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும்.
யோகமான நாள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். உத்தியோகத்தில் மறைமுக பகை அகலும்.
மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
நினைத்த காரியம் நிறைவேறும் நாள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
வருமானம் உயரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
விரோதிகள் விலகும் நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். மாற்று இனத்தவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.