

கற்றவர்களின் ஆலோசனையால் கவலை தீரும் நாள். உத்தியோகத்தில் சவால்களை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். நேற்று செய்யாமல் விட்டுவைத்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.
யோகமான நாள். இனிய சம்பவங்கள் நடைபெறும். வருமானத்தை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாள்வீர்கள். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.
முயற்சி கைகூடும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.
விடியும் பொழுதே நல்ல செய்தி வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். பயணம் பலன் தரும்.
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். உயர் அதிகாரிகளால் நன்மை கிட்டும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வருவர்.
வளர்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் உங்கள் பணிகளை சக ஊழியர்களும் பகிர்ந்து கொள்வர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம்.
வருமானம் உயரும் நாள். உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவல் தருவர்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதுமனை கட்டி குடியேறும் முயற்சி கைகூடும். தொழிலில் குறுக்கீடுகள் அகலும்.
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மனதை வாட்டிய கவலை இன்று முடிவிற்கு வரும்.