

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
நட்பால் நன்மை கிட்டும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.
சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.
யோகமான நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தென்படும்.
குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். வரன்கள் வாயில் தேடிவரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு.
முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்வர். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். திருமணத்தடை அகலும்.
செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம்.
சுபகாரியப்பேச்சு முடிவாகும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
நினைத்தது நிறைவேறும் நாள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரும். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.