

மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.
வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். எதிலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நடைபெறாது.
முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும், நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.
பொருளாதார நிலை உயரும் நாள், பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். சுபச்செய்தி வந்து சேரும்.
தாமதமான பணிகள் தடை யின்றி நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.
முடியாத காரியங்களை முடித்துக் காட்டும் நாள். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாக வரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உண்டு.
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
நன்மைகள் நடைபெறும் நாள், பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருமானம் உயரும். புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.