

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
நட்பால் நன்மை ஏற்படும் நாள். கடன் சுமை குறையும். நேற்றைய பணி தொடரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பயணத்தால் பலன் கிட்டும் நாள். திட்டமிட்ட காரியத்தை திடீரென மாற்றியமைப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர்.
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் தனவரவு உண்டு. வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நீண்டதூரப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
யோகமான நாள். சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டதூரப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு.