Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.4.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.4.2026  - இந்த ராசிக்காரர்களுக்கு தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்
Published on

மேஷம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாகரிகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

ரிஷபம்

சிக்கல்கள் விலகும் நாள். செய்தொழிலில் வெற்றி உண்டு. உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

மிதுனம்

முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.

கடகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் உண்டு.

சிம்மம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக தொகையை செலவிடுவீர்கள்.

கன்னி

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள்.

துலாம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். தூரதேசத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.

தனுசு

வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி உண்டு.

மகரம்

விரயங்கள் ஏற்படும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள்.

கும்பம்

விமர்சனங்களால் விரிசல் ஏற்படும். நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

மீனம்

மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com