

சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோக முயற்சி கைகூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.
வி.ஐ.பிக்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். நேற்றுப் பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். சுபச் செய்தி உண்டு.
யோசித்துச்செயல்பட வேண்டிய நாள். சேமிப்புக் கரையும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.
நல்ல தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகும்.
பாராட்டும் புகழும் கூடும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பகை மாறும்.
யோகமான நாள். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தனவிரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும்.