Today Rasipalan: இன்றைய ராசிபலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Today Rasipalan: இன்றைய ராசிபலன்  - இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்
Published on

மேஷம்

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். எதிரிகள் விலகுவர். நண்பர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

ரிஷபம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். வாகனப் பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள்.

கடகம்

பொருளாதார நிலை உயரும் நாள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

துலாம்

மனக்குழப்பம் அகலும் நாள். வரவைவிட செலவு கூடும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவ செலவு குறையும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

தனுசு

நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

மகரம்

வளர்ச்சி கூடும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கும்பம்

விரயங்கள் மேலோங்கும் நாள். உணர்ச்சிவசப்படுவதால் உறவு பகையாகும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.

மீனம்

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் வளர்ச்சி கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com