துலாம்- 2026 சித்திரை மாத ராசிபலன்

ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
துலாம்- 2026 சித்திரை மாத ராசிபலன்
Published on

கலை ஆர்வம் நிறைந்த துலாம் ராசியினரே!

பிறக்கப் போகும் சித்திரை மாதத்தில் ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு சம சப்தமமான ஏழாம் இடத்தில் உச்ச சூரியனுடன் இணைந்து தன் வீட்டை தானே பார்க்கிறார்.ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிகும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும்.

ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்துச் செல்வீர்கள். மன நிம்மதி இருக்கும். வீட்டில் எல்லோரும் எப்போதும் சந்தோசமாக இருப்பார்கள்.

குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும்.

முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்ப சொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும்.

தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீடு மாற்றம் செய்ய நேரும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்யக் கூடும்.சிலருக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். நட்பு வட்டாரங்களால் மன சங்கடம் உருவாகும். ஆறாம் அதிபதியாகிய குரு பாக்யாதிபதி புதனுடன்

பரிவர்த்தனை பெறுவதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. சில வளர்ச்சிகள் தடைபடலாம். ஆனால் குரு பார்வை பட்ட இடத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும்.

காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்யும் நேரம். திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணமே வேண்டாம் என்றவர்கள் கூட திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். திருமணத்திற்கு நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். மாணவர்களுக்கு கற்றல் ஞானம் மிகுதியாகும்.உழைப்பிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். சில மாணவர்களுக்கு வேற்று மொழி கற்கும் வாய்ப்பும் ஆர்வமும் உண்டாகும். போட்டித் தேர்வில் பெற்றி பெற்று பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவார்கள்.

பொருளாதாரம்:

பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. விரும்பிய கடன் தொகை எளிதில் கிடைக்கும்.ராசிக்கு குருப் பார்வை பதிவதால் வரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.

அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. என்றோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.

பெண்கள்:

மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். ஜனன கால ஜாதகப்படி தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு சிறு சிறு உடல் பாதிப்பு மனசஞ்சலம் இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் தொடர்ந்து சுபநிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வருகையில் குதூகலம் நிரம்பியிருக்கும்.

மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். தாய்வழிப் பாட்டியின் நகைகள், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு வலுவாக இருக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும்.பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றத்துடன் ஊதிய உயர்வும் கிடைக்கும்.தனியார் துறையினர் பழைய வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

புதிய வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பணம் கொடுத்து ஏமாறலாம் . அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் ‘மெமோ’ வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும்.

முதலீட்டாளர்கள்:

தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள்.

பல புதிய தொழில் அதிபர்கள் உருவாகுவார்கள். சில உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு டிரேட் மார்க் வாங்குவார்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவி கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.புதிய கூட்டாளியின் நாணயம் குறைவுபடும்.

அரசியல்வாதிகள்:

எதிர்மறை எண்ணங்கள் விலகும். ஏழில் உள்ள சூரியன் பொது ஜனத் தொடர்பை அதிகப்படுத்துவார். மக்களுடன் மக்களாக கலந்து சேவை செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு மிகப் பொன்னான காலம் . எதிரிகள் விலகுவார்கள். உங்களின் புகழ் பரவும். யாரும் உங்களை அசைக்க முடியாது.

அரசியலில் சாதனை படைப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். கடன் வாங்கி அரசியலுக்காக செலவு செய்வதை தவிர்க்கவும். உங்களின் உழைப்பிற்கு அபரிமிதமான பலன் கிடைக்கும்.சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.

கவனமாக செயல்பட வேண்டிய காலம்:

சனி செவ்வாய் சேர்க்கை ராசிக்கு ஆறாமிடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது. கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.

எனினும் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் வாழ்க்கைத் துணையால் பிரச்சனைகள் ஆரம்பமாகும். அதனால் கருத்து வேறுபாடு சற்று மிகைப்படுத்தலாக உருவெடுக்கும்.

சில தம்பதிகளுக்கு மூன்றாம் நபரின் குறுக்கீட்டால் பிரிவினை உண்டாகும். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். வாழ்க்கைத் துணை மூலம் அதிகப்படியான பொருள் வரவு உண்டாகும். வேற்று மொழி, வேற்று மத நண்பர்கள் கிடைப்பார்கள்.

சிலருக்கு நண்பர்கள் பங்காளிகளுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். உறவுகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் கை நழுவிப்போகலாம். செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். என்பதால் கவனம் தேவை.

பரிகாரம்

சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து சுமங்கலி பெண்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மல்லிகை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.

பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com