

தனித்திறமைகள் நிறைந்த மிதுன ராசியினரே!
பிறக்கப் போகும் சித்தரை மாதத்தில் உங்களின் ராசி அதிபதி புதன் சித்திரை 17 வரை மீன ராசியில் நீச்சமாக இருக்கிறார்.குருவுடன் பரிவர்த்தனை பெறுவதால் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார்.திட்டங்கள் தீட்டி புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.பிறருக்கு உதவி செய்து பாக்கிய பலனை அதிகரித்துக் கொள்வீர்கள்.
பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். மனச் சங்கடங்கள் அகலும். துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் முயற்சியல் சிறு தடை, தாமதம் நிலவினாலும் முடிவில் பெற்றி உங்களுக்கே உண்டாகும்.பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களுக்கு இது பொற்காலமாக அமையும். விலகிச் சென்ற உறவுகளை குருபகவான் மீட்டுத் தருவார்.
உறவுகள் பகை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். உறவுகளிடம் கோள் மூட்டி வேடிக்கை பார்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.உங்கள் வார்த்தைக்கு குடும்பம் கட்டுப்படும். குடும்ப முன்னேற்றத்திற்கான அனைத்து தேவைகளும் நிறைவாகும். பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி கிடைக்கும்.
புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும்.
சிறு சிறு ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் உடனே சரியாகி விடும். போதிய ஓய்வு, நிறைந்த சந்தோஷம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். டென்ஷன் குறையும். ஜனன கால ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சித்திரையில் திருமணம் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
குடும்பத்துடன் சென்று குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனை களை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த தடைகள் அகலும். மாணவர்களுக்குபோட்டித் தேர்வில் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் கல்லூரிக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி பரிசு கிடைக்கும்.
பொருளாதாரம்:
தன வரவில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்தாலும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இல்லை என்ற நிலை இல்லை. முன்பு இருந்ததை விட வருமான உயர்வு அதிகமாகவே இருக்கும். வட்டிக்கு வட்டி கட்டிய கடன் பிரச்சனைகள் குறையும்.ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணை யால் ஆதாயம் உண்டு. சொகுசு வாழ்க்கை வாழப் போகிறீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், ஆபரணங்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்கள்:
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரி களால் சகாயங்கள் உண்டாகும்.தொழில், உத்தியோகம், திரு மணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும். பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் போட்டி போட்டு கவனிப்பார்கள்.
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்கள்:
மிதுன ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். உங்கள் முன்னேற்றம் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவார்கள். தலைக்கு வந்த பிரச்சனைகள், தலைப்பாகையோடு சென்று விடும் என்று உறுதியாக கூறலாம். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் சீராகும்.வெளிநாட்டு வேலைக்கு முயற்சி தற்போது பலிதமாகும். வேறு வேலைக்கு முயற்சி செய்யும் தனியார் துறை யினருக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேலை மாற்றம், ஊதிய உயர்வு, ஊர் மாற்றம் என அனைத்து விதமான முன்னேற்றமும் உண்டாகும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள்.
முதலீட்டாளர்கள்:
10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். தற்போது 10ல் சனிபகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சிந்தனை முழுவதும் தொழில் பற்றியே இருக்கும்.தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும்.
மன வலிமை அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். இதுவரை ஒரு தொழிலில் செய்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். பாக்கிய ஸ்தான ராகுவால் தொழிலில் நிலவிய மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். சிலருக்கு தொழில் விரிவாக்க சிந்தனை தோன்றும்.வெற்றி மேல் வெற்றி உண்டாகும். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவர்கள்.
அரசியல்வாதிகள்:
பதவி ஸ்தான அதிபதி சுக்ரன் தன் வீட்டை தானே உச்ச சூரியனுடன் இணைந்து பார்க்கிறார். பெயர், புகழ் உயரக்கூடிய காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என பல மிதுன ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து அரசியல் களத்தில் இறங்குவார்கள். அரசியலில் ஈடுபட்டோருக்கு ராஜ யோகம் தரும் காலமாகும். கட்சிக்காக அலைச்சல் மிகுந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய மாற்றங்கள் உருவாகும்.
கடந்த காலங்களில் விதைத்த விதை தற்போது துளிர் விட ஆரம்பித்து விட்டது. மக்கள் மனதில் இடம் பிடித்து உங்கள் பெயர், அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். மிதுன ராசி அரசியல் பிரமுகர்கள் காட்டில் பண மழைதான். அற்புதமான நல்ல காலம். பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும். lபெயர், புகழ், செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளது.
தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் தலை தூக்கும்.
அதிர்ஷ்டம் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் சக பணியாளர் களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப உறவுகளின் அன்பு, ஆதரவும் அதிகரிக்கும்.தவ றான எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும்.
இரண்டாம் திருமணம் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகுவதை தவிர்க்க வும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். எதிர்பார்பார்ப்புகளில் தடை தாமதம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் கை மாறிப் போகலாம். வழக்குகள் இழுபறியாகும்.தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதி கரிக்கும். புதன்கிழமை சயன கோலத்தில் உள்ள மகாவிஷ்ணு மற்றும் தாயாரை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406