

வீரமான மேஷ ராசியினரே!
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பங்குனி 28 வரை ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம்.
பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. இதனால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம் உண்டாகும்.
பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.பிள்ளைகளின் சுபகாரியங்கள் கோலாகலமாக நடைபெறும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம்.
விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப் பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும். ஆயுள் பயம் அகலும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் உதவும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் அற்புதமான தமிழ் மாதமாக அமையப் போகின்றது.
பொருளாதாரம்:
தன ஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பங்குச்சந்தை, பந்தய வெற்றி, எதிர்பாராத தொழில் லாபம் போன்றவற்றால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கடன் தொகை எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து கிடைக்கும்.
ஏராளமான செலவும் வரும். ராசி அதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்னை செய்வதை தவிர்க்கவும்.பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை குறைக்க முடியும்.
பெண்கள்:
லௌகீக வாழ்வின் அனைத்து இன்பங்களை யும் அனுபவிக்க தேவையான வசதி வாய்ப்புகளை 11ம்மிட ராகு கொடுப்பார். ராகு கொடுக்கும் பணவசதியை அனுபவிக்க விடாமல் தொழில் நிமித்தமாக தம்பதிகள் ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ வேண்டிய சூழலை 5ம்மிட கேது கொடுப்பார்.
வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். கடன் சுமை குறையும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்: ராசிக்கு 12ல் சனியின் சஞ்சாரம் இருப்பதால் உத்தியோகத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும்.வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்த மாகும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.ஆனால் பண வரவில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் சம்பள விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள்:
இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது.தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள்:
அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 5ல் கேது இருப்பதால் யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக் கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்தி விடலாம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும்.
சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான். நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம்.
கவனம் தேவை:
சனி + செவ்வாய் சம்பந்தம். ராசிக்கு 12ம்மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உள்ளதால் அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும். அதிக அலைச்சல் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்மந்திகளிடம் நயந்து பேசவும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் அல்லது தொழில், வேலைக்காக தம்பதிகள் ஓரிரு மாதம் பிரிந்து வாழலாம். சிலர் வேலை மாற்றம் செய்யலாம். அல்லது கொடுத்த பணியை திருப்திகரமாக முடிக்க முடியாது. ஒரு கடனை அடைக்க மறுகடன் பெறலாம்.
சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். ஏழரைச் சனியின் காலத்தில் செய்யாத குற்றத்திற்காக அனுபவித்து வரும் சிறை தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும்.
பரிகாரம்:
சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்து நீர் மோர் தானம் வழங்கவும். செவ்வாய்கிழமை வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406