என் மலர்tooltip icon

    மேஷம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    திட்டமிட்டு செயல்படும் வாரம். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானம் செல்லுவதால் பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள்.

    குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய தொழில்களை தேர்வு செய்து படிப்படியாக உயர்ந்து வெற்றி பெறுவீர்கள். திராசி மற்றும் 8-ம் அதிபதி செவ்வாய் நீசம் பெறுவதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செவ்வாய் 8ம் பார்வையாக சனியை பார்ப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும்.

    சிலருக்கு வருமானம் தரக் கூடிய புதிய சொத்துக்கள் சேரலாம். பழைய கூட்டாளிகள் விலகி புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். கோட்சார சர்ப்ப தோஷத்தால் ஏற்பட்ட திருமணத் தடை குரு பார்வையால் விலகும். சுப செலவிற்காக விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்து விடும்.ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசையன்று பட்சிகளுக்கு உண விடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×