மேஷம்- வார ராசிபலன் 7.6.2026 முதல் 13.6.2026 வரை

பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும்.
மேஷம்- வார ராசிபலன்
மேஷம்- வார ராசிபலன்
Published on

மேஷம்

புதிய சொத்துக்கள் சேரும் வாரம். 2,7ம் அதிபதி சுக்கிரன் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த சேர்க்கையை ராசி அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இது குருமங்கள யோகமாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும். சிலருக்கு வருமானம் தரக் கூடிய புதிய சொத்துக்கள் சேரலாம்.

எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பொன்னையும், பொருளையும் விட புகழ், பதவி மீது அதிக ஆசை இருக்கும். சிலருக்கு ராணுவம், போலீஸ், சட்டம்,அரசியல் போன்றவற்றில் உயர் பதவிகள் கிடைக்கும். சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும்.எதிரிகளின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள்.

பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். குல தெய்வ, குடும்ப தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். உயர்கல்வி முயற்சி கைகூடும். கலைத்துறையினரின் திறமை மிளிரும்.திருமணத் தடை குரு பார்வையால் விலகும். கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி,

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com