வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

Published on

27.7.2025 முதல் 2.8.2025 வரை

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான ருண ரோகச் சத்ரு ஸ்தானத்தில் சனி பகவானின் பார்வையில் சந்திக்கிறார். 3, 6ம் அதிபதி புதன் வக்ரம் பெறுவதால் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் உள்ள பிரச்சினையை சித்தப்பா தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார்.

உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். தடைபட்ட பணிமாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் உங்களை மகிழ்விக்கும்.

அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். தொழில் விருத்திக்காக சிலர் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கக் கூடும். ஆடிப்பூரம் அன்று சுமங்கலி பெண்களுக்கு வளையல் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com