மேஷம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும்.
மேஷம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை
Published on

மேஷம்

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசியில் தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார். தடைபட்ட வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த பின்னடைவுகள் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். சிறு தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாக்கால் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.

பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வீடு அல்லது பிளாட் வாங்க ஏற்ற காலம். சிலருக்கு மருமகன், மருமகள் வரும் வாய்ப்புள்ளது. பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். முருகன் வழிபாட்டால் வெற்றியை அதிகரிக்க முடியும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com